சென்னை: மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டபோது சிசிடிவியில் பதிவான காணொளி காட்சிகளின் பதிவுத் தொகுப்புகள் அழிந்துவிட்டதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தற் போது தகவல் வெளியிட்டுள்ளது. அப்போலோவில் சிசிடிவி புகைப்படக் கருவியே இல்லை என்று மருத்துவமனை நிர்வாகம் முன்பு கூறியிருந்த நிலையில், தற் போது அங்குள்ள சிசிடிவி வன்வட்டுப் பதிவுகளை ஒரு மாதம் மட்டுமே சேமித்து வைக்கமுடியும் எனத் தெரிவித்திருப்பது குழப் பத்தை ஏற்படுத்தியுள்ளது.
அப்போலோ மருத்துவமனைத் தலைவர் பிரதாப் ரெட்டி செய்தியாளர் சந்திப்பின்போது, ஜெய லலிதா சிகிச்சை பெற்ற அறையில் சிசிடிவி புகைப்படக் கருவிகள் இல்லை என்று அடித்துக் கூறி னார். முக்கிய பிரமுகர்கள் சிகிச்சை பெறும் பகுதிகளில் சிசிடிவி புகைப்படக் கருவிகள் வைப்பதில்லை என்றும் கூறினார். இந்நிலையில் அப்போலோ மருத்துவமனையில் உள்ள சிசி டிவி சர்வர்களில் பதிவுகளை ஒரு மாதம் மட்டுமே சேமித்து வைக்க முடியும் என விசாரணைக் கமிஷனில் அப்போலோ நிர்வாகம் இப்போது பதில் அளித்துள்ளது. அதற்குமேல் சேமிக்கமுடியாது என்றும் புதிதாக பதிவுகள் சேரும் போது பழைய பதிவுகள் தானா கவே அழிந்துவிடும் என்றும் அது கூறியுள்ளது.

