ஹெலிகாப்டர் ஊழல்: இடைத்தரகரை நாடு கடத்த துபாய் நீதிமன்றம் அனுமதி

1 mins read

புதுடெல்லி: ஹெலிகாப்டர் ஊழல் விவகாரத்தில் இடைத் தரகராகச் செயல்பட்டதாகக் கூறப்படும் கிறிஸ்டியன் மைக் கேலை இந்தியாவுக்கு நாடு கடத்த துபாய் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதனால் விரைவில் அவர் இந்தியாவில் விசாரணையை எதிர் நோக்குவார் என்று தக வல்கள் தெரிவிக்கின்றன. இத்தாலி நிறுவனமான 'அகஸ்டாவெஸ்ட்லேண்ட்' நிறு வனத்தின் இந்திய தலை வரான பீட்டர் ஹுலெட்டுக்கு அவர் இடைத்தரகராகச் செயல் பட்டதாகக் கூறப்படுகிறது.

ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் ஏற்கெனவே மைக் கேலுக்கு எதிராக அம லாக்கத்துறையினர் 2016ஆம் ஆண்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர். இந்தச் சூழ்நிலையில் மைக் கேல் கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் கைது செய்யப்பட்டார். அவரை நாடு கடத்துவது தொடர்பான வழக்கு துபாய் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் மைக்கேலை நாடு கடத்த துபாய் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.