கருணாஸ் மீது 6 பிரிவுகளில் வழக்கு

கருணாஸ் மீது 6 பிரிவுகளில் வழக்கு

1 mins read
Google News Preferred Icon

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் காவல்துறை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் மீது 6 பிரிவுகளில் போலிசார் வழக்குப் பதிந்தனர். முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் கடந்த 16ஆம் தேதியன்று வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசினார். "நான் அடித்துவிடுவேன் என் பதால் என்னைக் கண்டு எடப்பாடி பழனிசாமி பயந்தார். கூவத்தூரை அடையாளம் காட்டியவனே நான் தான்," என்று அவர் பேசினார்.

காவல்துறை அதிகாரி அரவிந் தனுக்கு, முடிந்தால் காக்கிச்சட் டையைக் கழற்றிவிட்டு நேருக்கு நேர் மோதி பார்க்குமாறு சவால் விடுத்திருந்தார். சாதி ரீதியாகவும் சில கருத்துக்களை கருணாஸ் தெரிவித்து இருந்தார். அந்தப் பேச்சையொட்டி சென்னை நுங்கம்பாக்கம் போலி சார் கருணாஸ் மீது 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனிடையே, பெங்களூரு சிறையில் சொத்துக் குவிப்பு வழக் குத் தொடர்பில் அடைக்கப்பட்டு இருக்கும் சசிகலாவைச் சந்தித்த கருணாஸ், சகிகலா சிறையில் உற்சாகமாக இருக்கிறார் என்று தெரிவித்தார். சசிகலாவின் உடல் நலம் பற்றிய வதந்திகளுக்கு இதன் மூலம் கருணாஸ் முற்றுப் புள்ளி வைத்தார்.