வாகன ஆய்வாளர் வங்கிப் பெட்டியில் 10 கிலோ தங்கம்

வாகன ஆய்வாளர் வங்கிப் பெட்டியில் 10 கிலோ தங்கம்

1 mins read
Google News Preferred Icon

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றிய பாபு, 55, என்பவரின் பெட்டகத்தில் 10 கிலோ தங்கம், 20 கிலோ வெள்ளி கைப்பற்றப்பட் டதை அடுத்து அவருக்கு எதிரான நடவடிக்கைகள் முடுக்கிவிடப் பட்டு உள்ளன. அதிகாரி பாபு, சில நாட்களுக்கு முன் வாகன தகுதிச் சான்று வாங் குவதற்காக ரூ.25,000 வாங்கிய தாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில், விழுப்புரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலிசார் விசாரணை நடத்தி கடந்த 11ஆம் தேதி பாபுவையும் அவரது உதவி யாளர் செந்தில்குமாரையும் கைது செய்தனர்.

அந்த அதிகாரி லஞ்சம் வாங் கியது உண்மையா என்பதைக் கண்டுபிடிக்க நடத்தப்பட்ட சோத னைகளில், கிணறு வெட்ட பூதம் கிளம்பியதுபோல, ஏராளமான தங்க நகைகளை பாபு சேர்த்து வைத்திருந்தது தெரியவந்தது. கடலூரில் உள்ள பாபுவின் வீட்டில் சோதனை நடத்தி ரூ.35 லட்சம் ரொக்கம், 200 பவுன் தங்க நகைகள், 15 கிலோ வெள்ளிப் பொருள்கள் கைப்பற்றப்பட்டதை அடுத்து, பாபுவின் வங்கிக் கணக்குகளும் வங்கிப் பெட்டகங் களும் முடக்கிவைக்கப்பட்டன.

கடலூரில் உள்ள தேசியமய மாக்கப்பட்ட இரு வங்கிகளில் பாபு வைத்திருந்த மூன்று பெட்ட கங்களை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவினர் திறந்து சோதனையிட்டனர். அதில், சுமார் 10 கிலே தங்க நகைகள், 20 கிலே வெள்ளி நகைகள் இருந்தன. இதையடுத்து, அவற்றைப் பெட்டகத்தில் வைத்து விட்டு அதிகாரிகள் திரும்பினர்.