சென்னை: உயர்கல்வித் தேர்வு களில் புத்தகத்தைப் பார்த்து பதில் எழுதும் முறை உள்ளிட்ட புதிய மாற்றங்கள் இடம்பெறும். இதற்கான வரைவு அறிக்கையை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்டுள்ளது. தேர்வு சீர்திருத்தம் குறித்து ஆராய வல்லுநர்கள் குழுவை ஜூனில் மத்திய அரசு அமைத் தது. குழுவின் அறிக்கை தொடர்பில் கல்வியாளர்கள், மக்களிடமிருந்து கருத்துகள் கேட்கப்பட்டு உள்ளன. மாணவர்களின் கூர்ந்தாய்வு, செயல்முறை, உடனடி முடிவு எடுக்கும் ஆற்றல், ஆழ்ந்த ஆய் வறிவு என பல்வேறு திறன்களை வெளிப்படுத்தும் வகையில் மொத்தம் 12 வகையான தேர்வு சீர்திருத்தங்களை அமல்படுத்த லாம் என வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கணினி முறைத் தேர்வு, உயர் சிந்தனை ஆய்வுத்திறன் தேர்வு, சிக்கலான பிரச்சினை களுக்குத் தீர்வு காண்பது, புத் தகங்களைப் பார்த்து பதில் எழுதுவது என பல்வேறு வகை மாற்றங்களை வல்லுநர்கள் குழு பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக் கப்பட்டு உள்ளது.
புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுதலாம்; வருகிறது மாற்றம்
1 mins read

