சென்னை: 'லெமூரியா கண்டத்தில் இருந்து தமிழ் வளர்ச்சி' குறித்த உலகத் தமிழறிஞர்கள் ஆய்வு மாநாடு நாளை கன்னியாகுமரியில் துவங்குகிறது. இரு நாட்கள் நடைபெறும் இந்த ஆய்வு மாநாட்டை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார் என்றும் கேரள ஆளுநர் சதாசிவம் கலந்து கொள்ள இருப்பதாகவும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். குமரி- லெமூரியா உலக தமிழ் ஆய்வு மையத்தின் சார்பில் நடைபெறும் இந்த ஆய்வு மாநாட்டில் 20 நாடுகளைச் சேர்ந்த உலகத் தமிழறிஞர்கள் பங்கேற்கின்றனர்.
உலகத் தமிழ் அறிஞர்கள் பங்கேற்கும் ஆய்வு மாநாடு
1 mins read

