ஓடி ஒளியவில்லை என்கிறார் நடிகர் கருணாஸ்

ஓடி ஒளியவில்லை என்கிறார் நடிகர் கருணாஸ்

1 mins read
Google News Preferred Icon

சென்னை: நடிகரும் எம்எல்ஏவு மான கருணாசை போலிசார் தேடி வருகின்றனர் என்றும் அவர் தலை மறைவாகிவிட்டார் என்றும் தகவல் வெளியான நிலையில் வீட்டில்தான் தங்கியுள்ளேன் என்று கருணாஸ் கூறியுள்ளார். "நான் எங்கும் ஓடி ஓளிய வில்லை. வளசரவாக்கம் வீட்டில் தான் தங்கியுள்ளேன்," என்று கருணாஸ் தெரிவித்தார். கடந்த 16ஆம் தேதி நுங் கம்பாக்கம் வள்ளுவர்கோட்டத்தில் முக்குலத்தோர் புலிப்படையின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் துக்குத் தலைமை வகித்து பேசிய அந்த அமைப்பின் தலைவர் கருணாஸ், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் தியாக ராயநகர் காவல் துணை ஆணையர் அரவிந்தனையும் அவ தூறாகப் பேசியதாகக் கூறப்படு கிறது.

இது தொடர்பான காணொளிக் காட்சிகளும் சமூக ஊடங்ககளில் பரவியது. இதையடுத்து கூட்டுச் சதி, வன்முறையைத் தூண்டிவிடுதல், கொலை மிரட்டல் விடுத்தல், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல், அவதூறாகப் பேசு தல் உட்பட எட்டுச் சட்டப் பிரிவு களின் கீழ் கருணாஸ் மீது நுங்கம் பாக்கம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.