'ராஜீவ் காந்தியை நான் கொல்லவில்லை'

'ராஜீவ் காந்தியை நான் கொல்லவில்லை'

2 mins read

வேலூர்: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 27 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் எழுவரில் ஒருவரான சாந்தன், மத்திய உள்துறை அமைச்சருக்கு உருக்கமான கடிதம் எழுதியிருக்கிறார். அந்த கடிதத்தில் ராஜீவ் காந்தியை நான் கொல்லவில்லை என்று அவர் கூறியுள்ளார். "என்னுடைய சிறை வாழ்க் கையைச் சிதறடிக்க உதவுங்கள்," என்றும் அந்தக் கடிதம் வழி சாந்தன் கோரிக்கை விடுத்துள் ளார்.

சாந்தன் தனது கடிதத்தில் இந்தியாவுக்கு வந்த நோக் கத்தையும் விவரித்துள்ளார். "நான் சுதேந்திரராஜா என்கிற சாந்தன். உண்மையைச் சொல்லி விடுகிறேன். ராஜீவ் காந்தி கொலைச் சதித் திட்டத்தோடு இந் தியாவுக்கு வரவில்லை. ஆஸ்திரே லியாவுக்குப் போவதுதான் என் நோக்கம். அந்தக் காலக்கட்டத்தில் இலங்கைத் தமிழர்கள் பலரும் தலைநகர் கொழும்பு வழியாகப் பயணிக்காமல் இங்கு வந்துதான் வெளிநாடுகளுக்குப் பயணிப்பது வழக்கம்.

"அப்படித்தான் நானும் வந் தேன். இங்கு வரும்போது இலங் கையில் என் மீது குற்ற வழக்குகள் எதுவும் இல்லை என்று அதி காரிகளால் சான்றளிக்கப்பட்ட பிறகு எனக்கு அளிக்கப்பட்ட பாஸ்போர்ட்டுடன் வந்தேன். இது சிபிஐ வசமானது. பாஸ்போர்ட்டை வைத்தே நான் இலங்கைக் குடி மகன் என நிரூபிக்கப்பட்டது. "அனைத்துலக அளவில் புகழ் பெற்ற ஒரு தலைவரை கொல்ல வரும் வெளிநாட்டவன் யாராவது தன்னைப் பற்றிய உண்மையான தகவல்கள் அடங்கிய பாஸ் போர்ட்டை கொண்டு வருவானா? "இந்த வழக்கில் இன்னொரு குற்றவாளியாக சாந்தனும் காட்டப் பட்டுள்ளார். தடா நீதிமன்றத்தில் சிபிஐ வழக்கறிஞர் வாதிடும்போது விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆதரவாளருக்கு நான் பணம் கொடுத்ததாகச் சொன்னார்.