விமான ஒப்பந்தம்: மோடிக்கு நெருக்கடி

விமான ஒப்பந்தம்: மோடிக்கு நெருக்கடி

2 mins read
df1f69da-a383-4b45-bfee-5bc6de2b5b1e
-

புதுடெல்லி: பிரான்சிடமிருந்து போர் விமானங்களை வாங்க ஒப் பந்தம் செய்ததில் ஊழல் நடந் திருப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நெருக்கடி முற்றுகிறது. நாட்டுக்குத் துரோகம் இழைத்துவிட்ட மோடி பிரதமர் பதவியில் இருந்து உடனடியாக விலக வேண்டும் என்ற குரலும் பலமாக ஒலிக்கத் தொடங்கி உள்ளது. குறிப்பாக, முன்னாள் பிரான்ஸ் அதிபர் ஃப்ரான்காய்ஸ் ஹாலண்ட் இவ்விவகாரம் குறித்து நேற்று முன்தினம் கருத்து வெளி யிட்டதைத் தொடர்ந்து எதிர்க் கட்சிகள் இவ்விவகாரத்தைக் கையிலெடுத்து சரமாரியாகத் தாக்கி வருகின்றன.

செய்தியாளர்களிடம் பேசிய திரு ஹாலண்ட், "நான் அதிபராக இருந்தபோது பிரான்சின் ரஃபேல் ரக போர் விமானத்தைத் தயாரித்து வழங்க இங்குள்ள 'டஸால்ட் ஏவி யேஷன்' நிறுவனத்துடன் இந்தியா ஒப்பந்தம் செய்தது. "டஸால்ட்டின் பங்காளியாக இந்தியாவில் எந்த நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற வாய்ப்பு பிரான்சுக்கு வழங்கப்பட வில்லை. அம்பானியின் 'ரிலை யன்ஸ் டிஃபென்ஸ்' நிறுவனத் துடன் மட்டுமே இணைந்து பணி யாற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டது. ரிலையன்ஸ் நிறுவனத்தையே தேர்ந்தெடுக்க வேண்டும் என்று டஸால்ட் நிறுவனத்துக்கு இந்திய அரசாங்கம் நெருக்குதல் கொடுத் தது," என்று தெரிவித்தார். அவரது இந்தக் கருத்து இந்திய அரசியலில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 36 ரஃபேல் விமானங்களைத் தயாரிக்க 8.7 பில்லியன் அமெரிக்க டாலர் செலவாகும் என மதிப்பிடப்பட்டது.

டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் இளையர் பிரிவினர் ஆளும் பாஜக அரசாங்கத் துக்கு எதிராக நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான ரவி சங்கர் பிரசாத், முன்னைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலேயே ரஃபேல் ஒப்பந்தத்தில் அம்பானி குழுமம் இடம்பெற்றிருந்தது என்று கூறியுள்ளார். படம்: இபிஏ