பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவுக்கு 3வது இடம்

பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவுக்கு 3வது இடம்

1 mins read

புதுடெல்லி: பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட உலக நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து 2வது ஆண்டாக இந்தியா 3வது இடத்தில் உள்ளதாக அமெரிக்க வெளியிட்டுள்ள புள்ளி விவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள் ளது. பயங்கரவாதத்தால் பாதிக்கப் பட்ட நாடுகள் குறித்து அமெரிக்கா ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. இதில், ஈரான் மற்றும் ஆப் கானிஸ்தானைத் தொடர்ந்து பயங் கரவாதத்தால் அதிகம் பாதிக்கப் பட்ட நாடாக இந்தியா உள்ளது. 2015ஆம் ஆண்டு வரை இந்தப் பட்டியலில் பாகிஸ்தான் 3வது இடத்தில் இருந்து வந்தது. இதே போன்று ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை தொடர்ந்து பயங்கர வாத தாக்குதல்களை அதிகம் நடத்தும் அமைப்பாக தலிபான் மற்றும் அல்-ஷபாப் அமைப்புகள் இருந்து வருகின்றன.