புதுடெல்லி: இந்தியா முழுவதும் சுமார் பத்து கோடி ஏழைக் குடும் பங்களுக்குத் தலா ரூ.5 லட்சம் வரையிலான புதிய மருத்துவ காப் பீட்டுத் திட்டத்தை இன்று பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இந்தத் திட்டத்தின் கீழ் ஐந்து லட்சம் வரையிலான மருத்துவ செலவுகளை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளும். இதில் பயன் அடையும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. கடந்த பிப்ரவரி மாதம் வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யப் பட்டபோது 'ஆயுஷ்மான் பாரத்' எனும் இந்தத் திட்டம் அறிவிக் கப்பட்டது.
'மோடி கேர்' என்றும் அழைக்கப்படும் 'பிரதமர் ஜன் ஆரோக்கியா யோஜனா திட் டத்தை' இன்று திரு மோடி ராஞ் சியில் நடைபெறும் நிகழ்ச்சியில் அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைக்கிறார். இந்த மாபெரும் தேசிய சுகா தாரப் பாதுகாப்பு திட்டம் தீனதயாள் உபாத்யாயா பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி தொடங்கப்படும் என்று கடந்த ஆகஸ்டு மாதம் பிரதமர் மோடி தனது சுதந்திர நாள் உரையில் கூறியிருந்தார். ஆனால் தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டு இரண்டு நாள் முன்னதாக இன்று தொடங்கப்படுகிறது. இந்தத் திட்டத்துக்காக மத்திய அரசு ஆண்டுதோறும் 12,000 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்யும் என்று நிதி அமைச்சர் அருண் ஜெட்லி வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்தபோது கூறியிருந் தார். இதன் மூலம் இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 40 விழுக்காடு பேர் பயன் அடைவர்.
மாபெரும் காப்பீட்டுத் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். படம்: இந்திய ஊடகம்

