சின்னத்திரை நடிகை நிலானி காணவில்லை

1 mins read
1bce0c30-5f10-4821-9d6e-74fae47eab95
-

சென்னை: சின்னத்திரை நடிகை நிலானி திடீரென மாயமானதால் பரபரப்பு நிலவி வருகிறது. அவர் எங்கு உள்ளார் எனப் போலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நிலானியும் சின்னத்திரை உதவி இயக்குநர் காந்தி லலித் குமாரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. நிலானி தன் கணவரைப் பிரிந்து தனது இரு குழந்தைக ளுடன் சென்னையில் தனியே வசித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கும் காந்தி லலித்குமாருக்கும் இடையே நட்பு மலர்ந்துள்ளது. தம்மைத் திருமணம் செய்து கொள்ளும்படி காந்தி லலித்குமார் வற்புறுத்துவதாகவும், தன்னை அடித்து உதைத்ததாகவும் சில தினங்களுக்கு முன்பு போலிசில் புகார் அளித்தார் நிலானி. இந்நிலையில் நிலானி தம்மைக் காதலித்துக் கைகழுவிவிட்ட தாகக் கூறி காந்தி லலித்குமார் தன் உயிரை மாய்த்துக்கொண் டார்.

முன்னதாக நிலானியுடன் தான் நெருக்கமாக உள்ள சில புகைப்படங்கள், காணொளிப் பதிவுகளை அவர் சமூக வலைத் தளங்களில் வெளியிட்டார். இவ்விவகாரம் குறித்து ஊட கங்களில் அடுத்தடுத்து பல்வேறு தகவல்கள் வெளியாகின. காந்தி தம்மை பல வகையிலும் மிரட்டிய தாக நிலானி குறிப்பிட்டார். இந்நிலையில் நிலானியும் தன் உயிரை மாய்த்துக்கொள்ள முயன் றது பரபரப்பை அதிகப்படுத்தி உள்ளது. அவர் தன் வீட்டில் உள்ள கொசு மருந்தைக் குடித் துள்ளார். அச்சமயம் அவரைப் பேட்டி காண வந்த செய்தியா ளர்களிடம் இதுகுறித்து அவரது இரு குழந்தைகளும் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.

காந்தி லலித்குமாருடன் நிலானி. படம்: தகவல் ஊடகம்