நெல்லை: திமுகவில் வாரிசு அர சியல் நடப்பதாக முதல்வர் எடப் பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் பாளையங் கோட்டை சென்ற அவருக்கு அதிமுகவினர் சிறப்பான வரவற்பு அளித்தனர். இதையடுத்து கட்சியினர் மத்தியில் பேசிய அவர், திமுகவில் சாதாரண தொண்டரால் தலைவ ராக முடியாது என்றார். அதிமுகவை அழிக்க வேண் டும் எனும் நோக்கத்துடன் தீய சக்திகள் செயல்பட்டுக் கொண்டி ருப்பதாகக் குறிப்பிட்ட முதல்வர், அத்தகையை சக்திகளுக்கு எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தகுந்த பாடம் புகட்டப்பட வேண்டும் என்றார்.
"ஜெயலலிதா இருந்தபோது நாடாளுமன்றத் தேர்தலில் 37 இடங்களில் வெற்றி கண்டோம். அதேபோன்ற வெற்றியை வரக் கூடிய நாடாளுமன்றத் தேர்தலிலும் பெற வேண்டும். அப்போதுதான் மத்திய அரசிடம் இருந்து தமிழகத் துக்குத் தேவையான நிதி உள் ளிட்ட அனைத்து திட்டங்களையும் கேட்டுப் பெற முடியும். நமது உரிமைகளை நிலைநாட்ட முடியும். "இங்கு அனைத்து எதிர்க்கட்சி யினரும் நமது அரசை எதிர்க்கி றார்கள். அதிமுக அரசை கவிழ்க்க வேண்டும், கட்சியை உடைக்க வேண்டும் என செயல் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதிமுக பலம் பொருந்திய இயக் கமாக உள்ளது," என்றார் முதல் வர் பழனிசாமி. அதிமுக எனும் கட்சி எம்ஜிஆரால் நாட்டு மக்களுக்காக தொடங்கப்பட்ட கட்சி என்று குறிப்பிட்ட அவர், அதிமுகவில் சாதாரண விவசாயி மகனும் முதல்வராக முடியும் என்றார்.

