சென்னை: பிள்ளையார் சதுர்த்தி ஊர்வலத்தின்போது ஏற்பட்ட மோதல் காரணமாக விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவு செங்கோட்டை யில் எதிர்வரும் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை நெல்லை ஆட்சியர் பிறப்பித்துள் ளார். பதற்றம் நிலவும் பகுதிகளில் பொதுக்கூட்டம், போராட்டங்கள் நடத்துவதற்கும் தடை விதிக்கப் பட்டுள்ளது. மேலும் எந்த இடத்திலும், எந்தக் காரணத்துக்காகவும் 5 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் ஒன்றாகக் கூடக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 540 போலிசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட் டுள்ளனர். பதற்றம் நிறைந்த பகுதிகளில் 10 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப் பட்டு கண்காணிப்புப் பணி தீவிர மடைந்துள்ளது.
செங்கோட்டையில் 144 தடை உத்தரவு மேலும் நீட்டிப்பு
1 mins read

