நேருக்கு நேர் மோத அதிமுக தயார்: திமுகவுக்கு ஓபிஎஸ் சவால்

1 mins read

நாகர்கோவில்: மக்கள் கைதட்டி சிரிப்பாய் சிரிக்கின்ற அளவுக்கு டிடிவி. தினகரன் பேசி வருவதாக துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற் றாண்டு விழாவில் பேசிய அவர், அடுத்த தேர்தலோடு இருந்த இடம் தெரியாமல் தினகரன் காணாமல் போய் விடுவார் என்று குறிப்பிட் டார். "எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தினமும் ஒரு பொய்க் குற்றச்சாட்டை அரசின் மீது சுமத்தி தம்மை விளம்பரப்படுத்திக் கொள்கிறார். அவரது புளுகு மூட்டைகளை மக்கள் ஒருபோதும் ஏற்கப் போவதில்லை.

"அவருக்குத் துணிவு இருந்தால் எதிர்வரும் இடைத்தேர்தல்களில் நேருக்கு நேர் நின்று அதிமுகவைச் சந்திக்கட் டும். இதற்கு அதிமுக தயார். ஆனால் ஸ்டாலின் தயாரா?" என்று சவால் விடுத்துள்ளார் ஓ. பன்னீர் செல்வம். இதற்கு திமுக பதிலடி கொடுக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.