தூத்துக்குடி: தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவையடுத்து ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு நடைபெற்றுள்ளது. இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த ஆய்வுக் குழுத் தலைவர் தருண் அகர்வால் தேவைப்பட்டால் மீண் டும் ஆய்வு நடத்தப்படும் என்றார். பெரும்பாலான மக்கள் ஆலைக்கு எதிராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படுவதாக அப் பகுதி மக்கள் தொடர்ந்து புகார் எழுப்பி வந்தனர். இதையடுத்து ஆலையை மூடக்கோரி பல்வேறு தொடர் போராட்டங்கள் நடை பெற்றன.
இந்நிலையில் கடந்த மே மாதம் நடைபெற்ற போராட்டத்தின்போது கலவரம் மூண்டது. அப்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். இதையடுத்து ஆலையை நிரந் தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தை அணுகியது.
ஆலை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த தீர்ப்பாயம், நிர்வாகப் பணிகளை மேற்கொள்ளலாம் என ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு அனுமதி அளித்தது. அதேசமயம் ஆலையை ஆய்வு செய்ய முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் குழு ஒன்றையும் அமைத்தது. இதைய டுத்து ஆய்வுக்குழு தூத்துக் குடிக்கு வந்து ஆலையை ஆய்வு செய்தது. இந்நிலையில் நேற்று பொது மக்களிடம் ஆய்வுக்குழுவினர் மனுக்களைப் பெற்றனர். அப்போது ஆலைக்கு ஆதரவாகவும் எதிராக வும் பலர் மனுக்கள் அளித்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் மூண்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

