சென்னையில் மலேசிய மணல்: இணையம் வழி விற்பனை

சென்னையில் மலேசிய மணல்: இணையம் வழி விற்பனை

1 mins read

சென்னை: மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள மணல் இப்போது விற்பனை செய்யப்படுகிறது. மணல் வாங்க விரும்புவோர் இணையம் வழி பதிவு செய்தால் நேரடியாக அவர் கள் குறிப்பிடும் முகவரிக்கு மணல் அனுப்பிவைக்கப்படும். மலேசியாவில் இருந்து 56,750 மெட்ரிக் டன் மணல் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அந்த மணல் நேற்று காலை சென்னையில் உள்ள துறைமுகத்தை வந்தடைந்தது. இந்த மணலை வாங்க விரும்புவோர் இணையம் வழி பதிவு செய்தால் லாரிகள் மூலம் உடனுக்குடன் விநியோகிக்கப்படும். இந்த விற்பனை முறையால் மணல் கடத்தலும், அதிக விலைக்கு மணல் விற்பதும் தடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.