பரவும் எலிக்காய்ச்சல், சிக்குன் குனியா: அவிநாசி மக்கள் அச்சம்

பரவும் எலிக்காய்ச்சல், சிக்குன் குனியா: அவிநாசி மக்கள் அச்சம்

1 mins read

கோவை: எலிக்காய்ச்சல், சிக்கன்குனியா பரவுவதால் அவிநாசி பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். தற்போது அப்பகுதியைச் சேர்ந்த 7 பேர் இக்காய்ச்சல் காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து காய்ச்சல் பாதிப்புள்ள கிராமங்களுக்குச் சுகாதாரத் துறையினர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர். காய்ச்சல் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.