உலக பாய்மரப் படகுப் பந்தய வீரரான இந்திய கடலோடி அபிலாஷ் டோமி மீட்பு

1 mins read
665d845e-a6fd-4da5-bb4c-7487cfef1c2d
-

பாய்மரப் படகில் உலகத்தைச் சுற்றும் அனைத்துலகப் போட்டியில் கலந்துகொண்டு வழியில் புயலில் சிக்கி படு காயமடைந்த இந்தியக் கடற் படை அதிகாரி அபிலாஷ் டோமி, 39, நேற்று இந்தியப் பெருங்கடலில் மீட்கப்பட்டார். டோமியின் உடல்நிலை சீராக இருக்கிறது என்றும் அவர் நேற்று மாலையில் ஆம்ஸ்டர்டாம் தீவுக்குக் கொண்டுசெல்லப்பட இருந் தார் என்றும் இந்தியாவின் தற்காப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் டுவிட்டரில் தெரி வித்தார். கோல்டன் குளோப் பாய்மரப் படகுப் பந்தயத்தைக் கையாளும் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கமும் டோமி சுயநினைவுடன் இருப்பதாகத் தெரிவித்தது.

படகில் தன்னந்தனியாக உலகைச் சுற்றிவரும் 30,000 மைல் பந்தயத்தில் கலந்து கொண்டு அபிலாஷ் டோமி, தம்முடைய துரியா என்ற படகில் பிரான்சில் ஜூலை 1ஆம் தேதி புறப்பட்டார். ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரிலிருந்து சுமார் 1,900 கடல்மைல் தொலை வில் புயலில் டோமி சிக்கிக் கொண்டார். அவருடைய படகு கடுமையாக சேதம் அடைந்துவிட்டது. முதுகில் டோமி படுகாயம் அடைந்து விட்டார். அதனால் அவர் உயிருக்குப் போராடி வந்தார். காயமடைந்து மூன்று நாள் கழித்து நேற்று மீட்கப்பட்டார்.