ஓபிஎஸ் கார் முற்றுகை

ஓபிஎஸ் கார் முற்றுகை

1 mins read

உத்தமபாளையம்: தேனி அருகே உத்தமபாளையம் அடுத்த சுருளி அருவியில் சாரல் விழா நடந்தது. இந்த விழாவில் பங்கேற்று திரும்பியபோது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் காரை சீர்மரபினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறை யினர் குறுக்கிட்டு அவர்களைச் சமாதானப்படுத்தியதால் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. மக்களுக்கு அரசியல் அமைப்பு சட்டத்தில் அங்கீகாரம் வழங்க வேண்டும் என்றும் நல வாரிய திட்டங்களைச் செயல் படுத்தக் கோரியும் சீர்மரபினர் சார்பில் துணை முதல்வரிடம் மனு வழங்கப்பட்டது. ஆனால் மூவருக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டதால் சீர்மரபினர் கோபம் அடைந்ததாகக் கூறப்படுகிறது.