திருமுருகன் காந்திக்கு திடீர் மயக்கம்

திருமுருகன் காந்திக்கு திடீர் மயக்கம்

1 mins read
Google News Preferred Icon

வேலூர்: வேலூர் சிறையில் உள்ள திருமுருகன் காந்திக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டதால் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, ஐ.நா. மன்றக் கூட்டத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்துப் பேசிவிட்டு நாடு திரும்பியபோது கைது செய்யப்பட்டார். கடந்த சில நாட்களாக திருமுருகன் காந்திக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று காலை அவருக்கு வயிற்றுப் போக்கு, மயக்கம், மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அதில் அவருக்குச் சர்க்கரை, இரத்த அழுத்தம் குறைவாக இருப்பது தெரிய வந்தது. அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.