கணவர் எனத் தெரியாமலேயே சிகிச்சை அளித்த தாதி

கணவர் எனத் தெரியாமலேயே சிகிச்சை அளித்த தாதி

2 mins read

ஓமலூர்: அரசு மருத்துவமனையில் கார் மோதி காயம் அடைந்த ஒரு வருக்குத் தாதி ஒருவர் சிகிச்சை யளித்தார். ஆனால் சிகிச்சை பலனளிக் காமல் ஆடவர் இறந்துவிட்டார். இந்நிலையில் நோயாளியின் கைவிரலில் இருந்த மோதிரத்தைப் பார்த்து அவர் தமது கணவர் என் பதை அறிந்த தாதி உடலைக் கட்டிப்பிடித்து அழுதார். இந்தப் பரிதாபமான சம்பவம் ஓமலூர் மருத்துவமனையில் நிகழ்ந்துள்ளது. சேலம் மாவட்டம், மேச்சேரி சீராமணியூர் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன், வயது 51, மனைவி சிவகாமி ஓமலூர் அரசு மருத்துவ மனையில் தாதியாகப் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 14 வயதில் ஒரு மகள் இருக்கிறார்.

ஞாயிற்றுக்கிழமை அன்று சீனிவாசன் புளியம்பட்டிக்குச் சென்று, மோட்டார் சைக்கிளில் மேச்சேரியில் உள்ள தனது வீட்டுக் குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது பச்சனம்பட்டி அருகே சாலையோரம் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு கைத்தொலைபேசியில் பேசியபோது பின்னால் வந்த கார் ஒன்று அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் வீசி எறியப்பட்ட சீனி வாசன் படுகாயம் அடைந்தார். உயிருக்குப் போராடிய நிலையில் அவரை அங்கிருந்தவர்கள் அவசர வாகனம் மூலம் ஓமலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதற்கிடையே வழக்கம்போல் சிவகாமி ஓமலூர் அரசு மருத்துவ மனைக்குப் பணிக்கு வந்திருந்தார்.

இந்த நிலையில் அவசர வாகனம் மூலம் கொண்டு வரப் பட்ட சீனிவாசனுக்கு மருத்துவர், தாதியர் அடங்கிய குழுவினர் அவசர சிகிச்சை அளித்தனர். இதில் சிவகாமியும் ஒருவர். விபத்தில் சிக்கியவரின் உடலில் இருந்த ரத்த கறையை அகற்றும் பணியில் சிவகாமி ஈடுபட்டபோது திமுக ஆதரவாள ரான அவரது கணவரின் கைவிர லில் திமுக சின்னம் பொறிக்கப்பட்ட மோதிரம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.