சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், மேலிட அழைப்பை ஏற்று நேற்று முன்தினம் டெல்லி புறப்பட்டார். அண்மையில் டெல்லி சென்ற தமிழக காங்கிரஸ் கட்சியின் போட்டி குழுவைச் சேர்ந்த சிலர், கட்சித் தலைவர் ராகுலைச் சந்தித்து திருநாவுக்கரசர் மீது புகார் கூறினர். ஆனால் அதன் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் போட்டி குழுவினர் சோனியாவைச் சந்தித்து புகார் கூறினர். இதையடுத்து திருநாவுக்கரசருக்கு மேலிடம் அவசர அழைப்பு விடுத்துள்ளது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி நிலவரம் குறித்து விரைவில் மேலிடம் ஆலோசனை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருநாவுக்கரசருக்கு திடீர் அழைப்பு
1 mins read

