சென்னை: சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள வீடுகள், வணிக கட்டடங்களுக்கு சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியிலும் ஏற்கெனவே வசூலிக் கப்பட்டு வரும் சொத்து வரியின் அடிப்படையில் தற்போது அதி கரிக்கப்பட்டுள்ளது. 50% முதல் 100 விழுக்காடு வரை சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் 12 லட்சம் சொத்து உரிமையாளர்களுக்கு புதிய வரி பற்றிய கடிதம் விநி யோகிக்கப்படவுள்ளது. கடந்த 18ஆம் தேதி புதிய சொத்து வரி நடைமுறைக்கு வந்தது. இதனால் 2018-19 ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான முதல் அரையாண்டு காலத்திற்கு உயர்த்தப்பட்ட புதிய சொத்து வரி யினை உரிமையாளர்கள் செலுத்த வேண்டும். ஒவ்வொருவருக்கும் எவ்வளவு சொத்துவரி உயர்ந்து இருக்கிறது என்பதை இணையம் வழி தெரிந்து கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது. ஆட்சேபணை இருக்குமாயின் அதனைத் தெரி விக்க வாய்ப்பும் வழங்கப்பட்டுள் ளது. புதிய வரி அடிப்படையில் 12 லட்சம் சொத்து உரிமையாளர் களுக்கு நேற்று முதல் வரி விவரம் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் 12 லட்சம் வீடுகளுக்கு புதிய சொத்து வரி கடிதம்
1 mins read

