சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தில் அப்போலோ மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள், ஊழியர்கள் சாட் சியம் அளித்தனர். அப்போது சசிகலா தரப்பு வழக்கறிஞரான ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜா செந்தூர்பாண்டியன், குறுக்கு விசாரணை பற்றிய விவரங்களை வெளியிட்டார். போயஸ்கார்டனுக்குச் சென்ற போது நடந்தவற்றை மருத்துவர் சினேகாஸ்ரீ விவரித்திருந்தார். "கடந்த 22.9.2016 அன்று போயஸ்கார்டனுக்குச் சென் றோம். அங்கு முதல் மாடியில் ஜெயலலிதா அரை மயக்க நிலை யில் கிடந்தார். ஆனால் அவ ருக்கு சுயநினைவு இருந்தது.
நான் அவருக்கு ஊசி போடும் போது வலி தாங்காமல் கையைத் தட்டிவிட்டார். அவருக்கு ரத்த அழுத்தம், கண்பார்வை, சர்க் கரை, பிராண வாயு குறித்துச் சோதனை செய்தேன். ஆக்ஸிஜன் கருவியைப் பொருத்திய பிறகு அவருக்கு ஆக்ஸிஜன் சராசரி அளவு 98 விழுக்காட்டுக்கு அதி கரித்தது. ஜெயலலிதா மருத்துவ மனை வரும் வரை முணு முணுத்துக்கொண்டே இருந்தார்" என்றார். அப்போது ஜெயலலிதாவிடம் சசிகலா பேசினாரா என்று மருத் துவர் சினேகாஸ்ரீயிடம் குறுக்கு விசாரணையின்போது கேட்ட தாக ராஜா செந்தூர்பாண்டியன் சொன்னார். அதற்கு, அவர் சசிகலா ஜெயலலிதாவிடம் பேச்சுக்கொடுத்துக்கொண்டே வந்தார் என்றார்.

