கோபி: பிரபல கன்னட நடிகர் ராஜ் குமாரை சந்தனக்கடத்தல் வீரப் பனும் அவனது கூட்டாளிகளும் கடத்திய வழக்கில் 18 ஆண்டு களுக்குப் பிறகு தீர்ப்பு வழங்கப் பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப் பட்ட அனைவரும் விடுவிக்கப் பட்டனர். கடந்த 2000ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி அன்று ஈரோடு மாவட்டம் தாளவாடி அரு கேயுள்ள தொட்டகாஜனூரில் உள்ள பண்ணை வீட்டில் மனைவி பர்வதம்மாளுடன் தங்கியிருந்த போது ராஜ்குமார் கடத்தப்பட்டார். அப்போது சந்தனக்கடத்தல் வீரப்பன், சேத்துக்குளி கோவிந் தன், சந்திரகவுடா, அவனது கூட் டாளிகள் 11 பேர் சேர்ந்து அவரை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றனர். ஏறக்குறைய 108 நாட்கள் ராஜ்குமார் காட்டில் பிணைக் கைதியாக வைக்கப்பட்டார். இவரை விடுவிப்பதற்காக நக்கீரன் சஞ்சிகையின் ஆசிரியர் கோபாலும் காட்டுக்குச் சென்று வீரப்பனைச் சந்தித்து பேச்சு நடத்தினார். பின்னர் ராஜ்குமார் விடுவிக்கப் பட்டார்.
நடிகர் ராஜ்குமாரை கடத்திய வழக்கு: அனைவரும் விடுதலை
1 mins read

