சென்னை: தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் முன்னி லையில் விமானத்தில் எதிர்ப்புக் குரல் கொடுத்த லூயிஸ் சோஃபியாவுக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்படவில்லை என்று புதுக்கோட்டை காவல்துறை யினர் தெரிவித்துள்ளனர். தமிழக மனித உரிமைகள் ஆணையத்தில் நேரில் முன்னிலையான புதுக் கோட்டை காவல்துறை ஆய்வாளர் திருமலை இந்த விவரத்தை வெளி யிட்டார். இந்த விசாரணையின்போது லூயிஸ் சோஃபியாவுடன் அவரது தந்தை மற்றும் வழக்குரைஞரும் இருந்தனர். பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கடந்த மாதம் 3ஆம் தேதி தூத்துக்குடிக்கு விமானத்தில் வந்தபோது மாணவி சோஃபியா பாஜகவுக்கு எதிராக முழக்க மிட்டார்.
'சோஃபியா வெளிநாடு செல்ல தடையில்லை'
1 mins read

