எச்.ராஜா மீது வழக்குப் பதிவு

2 mins read

சென்னை: நீதிமன்றத்தை அவ மதித்துப் பேசியதாகக் கூறப்படும் விவகாரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச். ராஜாவை ஏன் கைது செய்யவில்லை என்று தமிழக அரசுக்கு எதிர்க் கட்சிகள் குரல் எழுப்பியிருக்கும் வேளையில் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் அருண்மொழித் தேவன் அளித்த புகாரின் அடிப் படையில் காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இம்மாதம் முற்பகுதியில் இந்து ஆலயங்கள் மீட்பு இயக்கத்தின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற உண்ணா விரதப் போராட்டத்தில் பேசிய எச். ராஜா, "திட்டக்குடி கோயில் நிலத்தை அருண்மொழித்தேவன் ஆக்கிரமித்துள்ளார்," என்று கூறியதாகக் கூறப்படுகிறது. இதனால் சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வ நாதனிடம் அருண்மொழித்தேவன் புகார் அளித்தார்.

அதன்பேரில் மத்திய காவல்துறையினர் விசா ரணை நடத்தி வந்த நிலையில் எச்.ராஜா மீது இரு தரப்பினரிடையே மோதலை உருவாக்குதல், கலவரத் தைத் தூண்டுதல், பொதுமக் களிடம் தவறான கருத்தைப் பரப்புதல் ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மற்றொரு நிலவரத்தில் நீதிபதி செல்வம் அமர்வு தாமாக முன்வந்து தம் மீது அவமதிப்பு வழக்குத் தொடுக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் எச். ராஜா நேற்று மேல்முறையீடு செய்தார். புதுக்கோட்டை மாவட்டம் திரு மயத்தில் விநாயகர் சிலை ஊர் வலத்துக்கு அனுமதி மறுக்கப் பட்டதால் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட எச். ராஜா, காவல்துறை குறித்தும் நீதி மன்றம் குறித்தும் தகாத வார்த்தை களால் பேசியதாகக் கூறப்படு கிறது. இதற்கு கடும் விமர் சனங்களும் எழுந்தன.