டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு மேலும் சரிந்தது

1 mins read

உலகளவில் கச்சா எண்ணெய் விலை நான்கு ஆண்டுகள் காணாத உச்சத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று தொடர்ந்து சரிந்தது. ஓர் அமெரிக்க டால ருக்கு நிக ராக 33 காசு சரிந்து, 72 ரூபாய் 96 காசு என்ற நிலையை எட்டியது. இந்த ஆண்டில் மட்டும் ரூபாயின் மதிப்பு 11.89 விழுக்காடு வீழ்ச்சி அடைந்துள்ளது. ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நெருக்கடிநிலை அதி- கரித்துவரும் வேளையில் கச்சா எண்ணெய்யின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. ஒரு பீப்பாய்க்கு கச்சா எண்ணெயின் விலை 3 விழுக்காடு உயர்ந்து யுஎஸ் 81.28 டாலர் என்ற நிலையை எட்டியது.

இறக்குமதியாளர்களிடமிருந்து அமெரிக்க நாணயத்திற்கான தேவை அதிகரித்துள்ளதும் அமெரிக்காவின் மத்திய வங்கி சந் திப்பை முன்னிட்டு அந்நாட்டின் நாணயம் வலுவடைந்துள்ளதும் ரூபாய் சரிந்ததற்கான முக்கிய காரணங்களில் சில என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர். அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பை ரூ.68-70 வரம்புக்குள் மீட்டுக் கொண்டுவருவதற்காக, அத்தியா- வசியமற்ற பொருட்களின் இறக்கு மதியைக் கட்டுப்படுத்த இரண்டாம்- கட்ட நடவடிக்கைகளை அரசு நடைமுறைப்படுத்த உள்ளதாக இந்தியப் பொருளியல் விவகாரச் செயலாளர் சுபாஷ் சந்திர கர்க் தெரிவித்துள்ளார். ரூபாய் மதிப்பு சரிவால் இறக்கு- மதி மூலம் உள்நாட்டில் தொழில் புரியும் ஏராளமான நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை அடுத்த மாதத்திலிருந்து உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக நிபு- ணர்கள் கூறுகின்றனர்.