வடஇந்தியாவில் கனமழை, நிலச்சரிவு: குறைந்தது 25 பேர் பலி; ஏராளமானோர் பரிதவிப்பு

2 mins read
f2206c63-c8ff-45ea-af4d-ea990251132b
-

வடஇந்தியாவில் இமாச்சலப் பிர- தேசம், பஞ்சாப், ஹரியானா, ஜம்மு காஷ்மீர், டெல்லி, உத்தர காண்ட் உள்ளிட்ட பல மாநிலங் களில் கடந்த இரு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வெள்ளப் பெருக்கும் நிலச்சரிவும் ஏற்பட்டன. இவற்றில் சிக்கி குறைந்தது 25 பேர் உயிரிழந்துவிட்டதாக தக வல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, இமாச்சலப் பிரதேசம் தான் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. இங்கு கடந்த 23 ஆண்டுகளில் இல் லாத அளவிற்கு கனமழை பெய்து வரு கிறது. இத னால் அங்கு இயல்பு வாழ்க்கை பெருமளவில் முடங்கி உள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகள் மின்சாரத் தடையால் இருளில் மூழ்கியுள்ளன. குடிநீர், உணவு போன்ற அத்தியா- வசியப் பொருட்கள் கிடைக்காமல் அந்த மாநில மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

அம்மாநிலத்தின் சம்பா மாவட்- டத்தில் சுமார் 800 மாணவர்கள் நிலச்சரிவில் சிக்கிக்கொண்டனர். அத்துடன், மலையேற்றத்தில் ஈடு- பட்டிருந்த 45 ரூர்க்கி=ஐஐடி மாணவர்கள் திரும்பிவர முடி- யாமல் தவிக்கின்றனர். அங்கு ஏராளமான சுற்றுப்பய- ணிகள் வீடு திரும்ப இயலாமல் சிரமப்படுகின்றனர். அவர்களில் 62 பேர் தமிழகத்தைச் சேர்ந்த வர்கள் எனக் கூறப்படுகிறது. பனிப்பொழிவின் காரணமாக லாஹுல்=ஸ்பிடி பகுதியில் சிக்கிக் கொண்டுள்ள 300க்கும் அதிகமா னோர் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர்கள் விரைவில் மீட்கப்படுவார் கள் என்றும் இமாச்சலப் பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் தெரி வித்துள்ளார். மீட்பு நடவடிக்கைகளுக்காக இரண்டு ஹெலிகாப்டர்களை மத்திய அரசிடம் கேட்டுள்ளதாகவும் தற்காப்பு, உள்துறை அமைச்சர்களு டன் உதவிகள் குறித்து பேசியுள் ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இமாச்சலப் பிரதேசத்தின் பளம்பூர் அருகே ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அடித்துச் செல்லப்பட்ட கார். இம்மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையினால் வெள்ளப்பெருக்கும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டன. இதனால் சாலைப் போக்குவரத்து முடங்கியது. படம்: இபிஏ-இஎஃப்இ