ரூ.150 கோடி திட்டம்: அழகாகிறது வைகை

2 mins read
5c4df67d-46f9-44ee-b335-1fa224fb50a6
-

சென்னை: மதுரையின் அடையாளங்களில் ஒன்றான வைகை ஆற்றுக்குப் புதுப்பொலிவு தரும் வகையில் ரூ.150 கோடியில் புதுத் திட்டம் ஒன்று செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் வைகை ஆறு அழகாகவும் சிறந்த சுற் றுலாத் தலமாகவும் மாறும் என் கிறார் நீர்வழிச் சாலைத் திட்டப் பொறியாளர் ஏ.சி.காமராஜ். சென்னையில் செய்தியாளர்களி டம் பேசிய அவர், வைகை ஆறு நீரோட்டமின்றி மாசடைந்துள்ளது என்று குறிப்பிட்டார். "முன்னாள் பொதுப்பணித் துறை பொறியியலாளர்களுடன் கலந்தாலோசித்து வைகை ஆற்றை அழகுபடுத்தும் திட்டம் உருவாக் கப்பட்டுள்ளது. குஜராத்தில் உள்ள சபர்மதி ஆற்றில் ஆண்டு முழுவதும் நீரோட்டம் இருக்கும். அது போல வைகை ஆற்றையும் மாற்ற வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். "வைகை ஆற்றின் சராசரி அகலம் 240 மீட்டர். நதியின் இரு புறங்களிலும் தலா 20 மீட்டர் இடைவெளி விடப்படும்.

இதில் 6 மீட்டர் அகலமுள்ள பகுதி நடைபாதையாகவும் மீதமுள்ள பகுதி இருவழிப் போக்குவரத்துக்காவும் பயன்படுத்தப்படும். இதன் மூலம் நதியின் அகலம் 200 மீட்டர் என ஒரே சீராக அமையும். "இத்திட்டத்துக்கு ஆகும் மொத்தச் செலவு 150 கோடி ரூபாய். இதன் மூலம் வைகை ஆறு புதுப் பொலிவு பெறும்," என்று காமராஜ் தெரிவித்துள்ளார். தற்போது வைகை ஆற்றில் கழிவுநீர் அதிகளவு கலக்கிறது. இதனால் சென்னை கூவம் நதி யோடு ஒப்பிடும் அளவுக்கு வைகையின் பெருமை மங்கிவிட் டதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அண்மைய சில ஆண்டுகளாக வைகை ஆற்றில் எப்போதாவது ஒருமுறை தான் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மற்ற சமயங்களில் வறண்டு காணப்படுகிறது. இந்நிலையில் விவேக நகர் திட்டத்தின் கீழ் வைகை ஆற்றுக் கான துணைத் திட்டம் செயல் படுத்தப்பட்டால் சபர்மதியைப் போலவே வைகை ஆற்றிலும் ஆண்டு முழுவதும் நீரோட்டம் இருக்கும் என நீர்வள நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.