தமிழக காங்கிரசுக்கு புதிய தலைவர்: மேலிடம் முடிவு

தமிழக காங்கிரசுக்கு புதிய தலைவர்: மேலிடம் முடிவு

1 mins read

சென்னை: தமிழக காங்கி ரஸ் தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம் பரம் நியமிக்கப்பட இருப்ப தாகத் தகவல் வெளியாகி உள்ளது. நடப்புத் தலைவர் திருநாவுக்கரசரும் முன் னாள் அமைச்சர் தங்கபாலு வும் மாநிலச் செயல் தலை வர்களாக நியமிக்கப்பட உள்ளதாகத் தமிழக ஊடகம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் நாடாளு மன்றத் தேர்தலுக்குள் தமிழகத்தில் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் சில நடவடிக்கைகளைக் காங்கிரஸ் தலைமை மேற் கொள்ளும் என எதிர்பார்க் கப்படுகிறது. அதன் ஓர் அங்கமாக தமிழக காங்கிரசுக்கு புதிய தலைவரை நியமிக்க அக்கட்சித் தலைமை முடிவு செய்துள்ளதாகக் கூறப்படு கிறது. கட்சியின் பிரசாரக் குழுத் தலைவராக ஈவிகேஎஸ். இளங்கோவன் நியமிக்கப்படுவார் என்றும் வசந்தகுமார், பீட்டர் அல்போன்ஸ் உள் ளிட்டோருக்குப் புதிய பொறுப்புகள் அளிக்கப்பட இருப்பதாகவும் தெரிகிறது.