மதுரை: மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக கிடைத்த தகவலையடுத்து கொடைக்கானல் மலைப்பகுதியில் போலிசார் கண்காணிப்பு தீவிரமடைந்துள்ளது. 24 மணி நேரமும் போலிசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் பொன்னுசாமி தெரிவித்துள்ளார். கேரளா, கர்நாடக மாநிலங்கள் சந்திக்கும் எல்லைப் பகுதிகளில் ஆயுதமேந்தி போராட்டம் நடத்தப்போவதாக மாவோயிஸ்டுகள் அறிவித்துள்ளனர். இதையடுத்து கண்காணிப்பைத் தீவிரப்படுத்துமாறு காவல்துறைக்கு உளவுத்துறை அறிவுறுத்தி உள்ளது. அதன் பேரில் கண்காணிப்புத் தீவிரமடைந்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மாவோயிஸ்ட் தாக்குதல் நடத்த வாய்ப்பு: தீவிரமடைந்த கண்காணிப்பு
1 mins read

