கருணாஸை காவலில் எடுக்கக் கோரும் காவல்துறை மனு தள்ளுபடி

கருணாஸை காவலில் எடுக்கக் கோரும் காவல்துறை மனு தள்ளுபடி

1 mins read

சென்னை: நடிகரும் எம்எல்ஏவுமான கருணாஸை 7 நாட்கள் காவல் எடுத்து விசாரிக்க அனுமதிக்கக் கோரி காவல்துறை தாக்கல் செய்த மனுவை சென்னை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அண்மையில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக கருணாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 8 பிரிவுகளில் வழக்குப் பதிவாகி உள்ளது. அக்டோபர் 5ஆம் தேதி வரை அவரை நீதிமன்றக் காவலில் அடைக்க சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கருணாஸைக் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் போலிசார் மனுத்தாக்கல் செய்தனர். அம்மனுவை நேற்று விசாரித்த நீதிபதி அதை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்நிலையில் தமக்குப் பிணை வழங்கக் கோரி கருணாஸ் தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளது.