விழிப்புணர்வு ஏற்படுத்த மருத்துவர்கள் தொடர் ஓட்டம்

விழிப்புணர்வு ஏற்படுத்த மருத்துவர்கள் தொடர் ஓட்டம்

1 mins read
52a9e626-cbc8-4c69-b6ad-f7bb76ca9c89
-

புற்றுநோய் மற்றும் சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மதுரையில் தொடர் ஓட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான மருத்துவர்களும் மருத்துவ மாணவர்களும் கலந்துகொண்டனர். "எந்தவிதமான புகையிலைப் பொருட்களையும் இளையர்கள் பயன்படுத்தக்கூடாது. வாய்ப் புற்றுநோய்க்குப் புகையிலைப் பொருட்களே முக்கிய காரணம். அதே போல் சாலைப் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றாததாலும் தலைக்கவசம் அணியாததாலும் பலர் உயிரிழக்க நேரிடுகிறது," எனத் தொடர் ஓட்டத்தில் பங்கேற்ற மருத்துவர்கள் தெரிவித்தனர். படம்: தகவல் ஊடகம்