நக்கீரன் கோபால்: தவறு செய்தால் ஆண்டவனே ஆனாலும் தவறு தவறுதான்

நக்கீரன் கோபால்: தவறு செய்தால் ஆண்டவனே ஆனாலும் தவறு தவறுதான்

2 mins read
5baf1768-f958-4183-ad94-0030ef5fdca4
-

சென்னை: தமிழகத்தின் முன் னணி வார இதழான 'நக்கீரன்' பத்திரிகையின் ஆசிரியர் ஆர். கோபால், தேச துரோக வழக்கின் கீழ் செவ்வாய்க்கிழமை காலை கைது செய்யப்பட்டு மாலையில் விடு தலை செய்யப்பட்டார். விடுதலைக்குப்பின் செய்தி யாளர்களிடம் பேசியபோது, "தவறு செய்வதை வெளியில் கொண்டு வரக்கூடாது என்று எந்த ஒரு சட்டத்திலும் இல்லை. தவறு செய்தால் ஆண்டவனே ஆனாலும் தவறு தவறுதான். 'நக்கீரன்' என்று பெயரை வைத் துக்கொண்டு ஏதோ மேம்போக் காக பத்திரிகையை நடத்திச் செல்லமுடியாது.

"ஜெயலலிதா என்மீது போட்ட 20க்கும் மேற்பட்ட அவதூறு வழக்குகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறோம். இன்னமும் கூட அது நிலுவையில் உள்ளது. ஆனால் 124 என்பது ஆளுநரை பணிசெய்ய விடாமல் தடுத்தாலோ, அவர்மீது தாக்குதல் நடத்த முயன்றாலோ போடக்கூடிய வழக்கு. அப்படி ஏதும் நடக்க வில்லை. "எனது செய்தியால் ஆளுநர் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்ததாக ஆளுநர் மாளிகை சொல்கிறது. அப்படி இருந்தால் அவர் ஆளுநர் மாளிகையிலேயே முடங்கி இருந்திருக்கவேண்டும். ஆனால் அவர் பணியில்தான் இருந்திருக்கிறார். "டிடிவி தினகரனின் குடும்ப அரசியலைப் பற்றி நான் பலமுறை எழுதி இருக்கிறேன்.

தினகரனின் மன்னார்குடி உறவுகளில் தலைக்கு ரூ.10,000 கோடி இல் லாதவர்கள் எவருமில்லை. அது குறித்தும் அவர்களின் சொத்து விவரங்கள் குறித்தும் 'நக்கீரன்' பல கட்டுரைகளை வெளியிட் டுள்ளது. இதனால்தான் எனது கைதுக்குப் பெரும்பாலான அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தநிலையில், டிடிவி தினகரன் மட்டும் என்னைக் கைது செய்ததை சரி என்று கூறியுள்ளார். "பாஜக, அதிமுக மீது விமர் சனங்கள் வைக்கும் 'நக்கீரன்' திமுக மீது மட்டும் பெரிய விமர்சனங்களை வைப்பதில் லையே ஏன் என்று கேட்கின்றனர். "திமுக தற்போது ஆட்சியில் இல்லை. 8 ஆண்டுகளாக அதி முகதான் ஆட்சியில் உள்ளது. ஆகவே எழுதுகிறோம். திமுகவும் என் மீது 20க்கும் மேற்பட்ட அவதூறு வழக்குகளைப் போட் டுள்ளது. எனக்கு 'பெரியார்' விருது வழங்கியபோது 'என்னை எதிர்த்து 'நக்கீரன்' எழுதுகிறது' எனக் கருணாநிதியே மேடையி லேயே பேசி இருக்கிறார். 'நக் கீரன்' முன் அனைவரும் சமம்" என்றார் ஆசிரியர் கோபால்.

விடுதலையானபின் 'நக்கீரன்' ஆசிரியர் ஆர்.கோபால் ஊடகங்களிடம் பேசுகிறார். படம்: ஊடகம்