சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இரண்டாவது கட்டமாக கழிவறை, ஏசி, படுக்கையுடன் கூடிய சுமார் ரூ.126 கோடி மதிப்புள்ள 471 சொகுசுப் பேருந்துகளை நேற்று கொடியசைத்து தொடங்கிவைத்தார். தமிழகத்தில் போக்குவரத்துத் துறை பெரிய நஷ்டத்தில் செயல்பட்டு வருவதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பயணிகளைக் கவர சுமார் 2,000 புதிய பேருந்துகளை வாங்குவதற்கு அரசு நிதி ஒதுக்கியது. இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் சுமார் 515 பேருந்து களை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னையில் சுமார் 471 சொகுசுப் பேருந்துகளைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இவ்விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத் தியநாதன், அமைச்சர்கள், எம்எல்ஏக்களும் பங்கேற்றனர்.

