ரயில் நிலையங்களில் காணாமல்போன 1,495 குழந்தைகள் மீட்பு

ரயில் நிலையங்களில் காணாமல்போன 1,495 குழந்தைகள் மீட்பு

1 mins read

கோவை: தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்களில் கடந்த ஒன்பது மாதங்களில் காணா மல் போன 1,495 குழந்தைகள் கண்டுபிடித்து மீட்கப்பட்டுள்ள தாக ரயில்வே கூடுதல் டிஜிபி சைலேந்திரபாபு கூறினார். ரயில்வே காவல்துறை யினருக்குப் புலனாய்வுத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி கோவை காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் நடந்தபோது சைலேந்திரபாபு பயிற்சியைத் தொடங்கிவைத்தபின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். "தமிழகத்தில் ரயில் மூலம் தினமும் 25 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்துவருகின்றனர். "குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் எதிரான குற்றங்கள் ரயிலில் நடக்கும் போது அந்தப் பிரச்சினைகளைக் கையாள்வது குறித்து ஒருநாள் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

"ரயில்கள் மூலம் குழந்தைகள் கடத்தப்படுவதைத் தடுக்கத் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் கடந்த ஆண்டில் மட்டும் காணாமல் போன 1,960 குழந்தைகள் மீட்கப்பட்டு உள்ளனர். கடந்த 9 மாதத்தில் மட்டும் காணாமல் போன 1,495 குழந்தைகளை மீட்டு, அவர்களின் பெற்றோரிடம் பாதுகாப்பாக ஒப்படைத்து உள்ளோம். ஏழு குழந்தை களுக்குப் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது. அது தொடர்பாக குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்," என்று டிஜிபி சைலேந்திரபாபு கூறினார்.