சென்னை: தமிழ்நாட்டில் கும்மிடிப் பூண்டி அருகே ஒதுக்குப்புறமான ஒரு கிராமத்தில் ஒரு தம்பதியை மடக்கிய நான்கு பேர், கணவரை தாக்கி அவருடைய 29 வயது மனைவியைப் பாலியல் கொடு மைக்கு ஆளாக்கிவிட்டார்கள். இந்தச் சம்பவம் திங்கட்கிழமை மாலை நேரத்தில் நிகழ்ந்ததாகவும் குற்றவாளிகள் என்று சந்தேகிக் கப்படும் நான்கு பேரும் குடித்து விட்டு இத்தகைய காரியத்தைச் செய்ததாகவும் போலிஸ் கூறியது. சந்தேகப்பேர்வழிகள் நான்கு பேரும் பின்னர் கைதுசெய்யப்பட் டனர். அந்த நால்வரில் இரண்டு பேர் பதின்ம வயது இளையர்கள். பாதிக்கப்பட்ட தம்பதியர் அதே கிராமத்தைச் சேர்ந்தவர்கள். கைது செய்யப்பட்டவர்களில் மோகன், 29, என்பவரும் முனிய சாமி, 36, என்பவரும் சிறைக்கு அனுப்பப்பட்டனர்.
பதின்ம வயது இளையர்கள் இருவரும் செங் கல்பட்டில் உள்ள விடுதிக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் பற்றி போலிஸ் பல விவரங்களைத் தெரிவித்தது. கார்த்திகேயன், 30, என்பவருக்கும் சைலஜா, 29, என்பவருக்கும் மூன்று மாதங்களுக்கு முன் திரு மணம் நடந்தது. கார்த்திகேயன் தன் மனைவியை அழைத்துக் கொண்டு மோட்டார்சைக்கிளில் கோயிலுக்குப் போய் சாமி கும் பிட்டுவிட்டு மாலை சுமார் 7.30 மணிக்கு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் அந்த நால்வரும் கார்த்திகேயனை வழிமறித்ததை அடுத்து கைகலப்பு மூண்டது. கார்த்திகேயனை நால்வரும் கண்டபடி தாக்கினர். திடீரென்று கத்தியை எடுத்து கார்த்திகேயனை மிரட்டி அந்த இடத்தைவிட்டு ஓடி விடும்படி எச்சரித்தனர்.
அவரும் கிராமத்தினரை உதவிக்கு அழைத்து வரலாம் என்று ஓடினார். அந்த நேரத்தில் அந்த நால்வரும் அந்தப் பெண்ணைப் பாலியல் பலாத்காரத் திற்கு ஆளாக்கினார்கள். கார்த்திகேயன் கிராமத்தினரு டன் திரும்பி வந்தபோது அதற்குள் அந்த நால்வரும் ஓடிவிட்டனர். பாதிக்கப்பட்ட பெண், கும்மிடிப் பூண்டி சிப்காட் போலிஸ் நிலையத் தில் புகார் தெரிவித்தார். அவருக்கு மருத்துவப் பரி சோதனை நடத்தப்பட்டது. அவர் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்டது உறுதியானது. சைலஜா, மணவிலக்குப் பெற்ற வர் என்றும் அவருக்கு ஏற் கெனவே நான்கு வயதில் ஒரு பையன் இருப்பதாகவும் அந்த மாது கார்த்திகேயனை திருமணம் செய்துகொண்டு அந்தக் கிராமத் தில் ஒரு வீட்டில் குடியேறியதாகவும் இதுபற்றி கார்த்திகேயனின் பெற் றோருக்குத் தெரியாது என்றும் போலிஸ் குறிப்பிட்டது.

