தாமிரபரணி புஷ்கரம் வழிபாடு கோலாகலமாகத் தொடங்கியது

தாமிரபரணி புஷ்கரம் வழிபாடு கோலாகலமாகத் தொடங்கியது

1 mins read
57d7c578-6972-473d-8721-9fa0b63b2ad8
-

நெல்லை: திருநெல்வேலி தாமிர பரணி நதியில் மகாபுஷ்கரம் விழா நேற்று கோலாகலமாகத் தொடங்கியது. வரும் 23ஆம் தேதிவரை நடக்கும் இவ்விழாவை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கிவைத்து நதியில் நீராடினார். பொதிகை மலையின் உச்சியில் உற்பத்தியாகும் தாமிரபரணி நதி, சமவெளிப் பரப்பில் தலைகாட்டும் பாபநாசம் முதல் கடலில் கலக்கும் புன்னக்காயல் வரையிலும் உள்ள 149 தீர்த்தக் கட்டங்களில் முக்கியமானவற்றில் சிறப்பு வழிபாடுகளுடன் நேற்று துறவி களும் பொதுமக்களும் நீராடினர். காலையில் நடந்த அகில பாரத துறவிகள் மாநாட்டில் புஷ்கரம் விழா தொடர்பான மலர் வெளியிடப்பட்டது. இதனிடையே, தாமிரபரணி மகா புஷ்கரம் விழாவில் பெரிய அளவில் உயிர்ச் சேதம் ஏற்பட லாம் என்று ஆற்காடு பஞ்சாங் கத்தில் கூறப்பட்டு உள்ளதால் உரிய நடவடிக்கை எடுக்கவேண் டும் என்று சமூக வலைத் தளங்களில் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாமிரபரணி ஆற்றில் முக்கியமான தீர்த்தக் கட்டங்களில் சிறப்பு வழிபாடுகளுடன் நேற்று துறவிகளும் பொதுமக்களும் நீராடினர். படம்: தமிழக ஊடகம்