சென்னை: எண்ணுர் துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்டுள்ள மலேசிய மணல் விற்பனைக்கான முன்பதிவை பொதுப்பணித் துறை இணையம் வழி தொடங்கி உள்ளது. தமிழக ஆறுகளில் இருந்து மணல் அள்ளுவதைப் படிப்படியாக குறைத்து, வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதி செய்வதற்குப் பொதுப்பணித் துறை வாயிலாக இரண்டு தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப் பட்டது. முதல் கட்டமாக மலேசியாவில் இருந்து 50,000 டன் மணல் செப்டம்பரில் இறக்குமதியானது. ஒரு யூனிட் மணலின் விலை 10,350 ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டது.
மலேசிய மணல்: முன்பதிவு தொடக்கம்
1 mins read

