'தாய்மொழிதான் வாழ்வை உயர்த்தும்'

'தாய்மொழிதான் வாழ்வை உயர்த்தும்'

1 mins read
Google News Preferred Icon

சென்னை: தாய்மொழி, தாய்நாடு மற்றும் பிறந்த ஊரை என்றென்றும் மறக்கக்கூடாது என்று மாணவர்களுக்குத் துணை அதிபர் வெங்கையா நாயுடு அறிவுரை கூறினார். சென்னை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா மற்றும் எத்திராஜ் கல்லூரியின் பவளவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் துணை அதிபர் வெங்கையா நாயுடு, ஆங்கிலத்தைவிட தாய்மொழிதான் மாணவர்களை உயர்த்தும் என்றார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஆகியோர் ஆங்கிலம் பயிலவில்லை என்றாலும் முதல்வராக உயர்வு பெற்றதை அவர் குறிப்பிட்டார்.