'சின்மயி பொய் பேசுகிறார்'

'சின்மயி பொய் பேசுகிறார்'

3 mins read
533a31d2-64d6-497a-9c72-b22b0b9aa251
-

சென்னை: இந்திப் பட உலகை அலறவைத்த பாலியல் புகார்கள் இப்போது தமிழ்த் திரையுலகையும் பதம் பார்க்கத் தொடங்கி உள்ளன. தாங்கள் பாலியல் தொந் தரவுக்கு ஆளானதாக பிரபலங்கள் பலரும் ஒருவர் மாற்றி ஒருவராக தாங்கள் அனுபவித்த வேதனைகள் குறித்து இப்போது தைரியமாகப் பகிர்ந்து வருகின்றனர். ஸ்ரீரெட்டி, தனுஸ்ரீ தத்தா உள்ளிட்டோர் இந்தப் பாலியல் புகார்களைக் கூறிவந்த நிலையில் இப்போது பிரபல பாடகி சின் மயியும் பாடலாசிரியர் வைரமுத்து தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இந்நிலையில், "வைரமுத்து மீது பொய் குற்றச்சாட்டுகள் சுமத் துவதை பாடகி சின்மயி நிறுத் திக்கொள்வது நல்லது," என்று சுவிஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான சுரேஷ் எச்சரித்துள்ளார். "சின்மயி கூறுவது போன்ற சம்பவம் நிகழ்ந்திருக்க வாய்ப்பே இல்லை. வைரமுத்து மீது பொய் யாக குற்றம்சாட்டுவதை நிறுத்திக் கொள்ளவேண்டும்," என அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். மீடூ (நான் கூட) எனும் ஹேஸ் டேக்கில் வெளியாகி வரும் கருத்துகள் கடந்த திங்கள்முதல் கோலிவுட்டை உலுக்கி வருகிறது. அதிலும் குறிப்பாக வைரமுத்து- சின்மயி விவகாரம் தமிழக மக்கள் மத்தியில் முக்கிய விவகாரமாகப் பேசப்பட்டு வருகிறது. சின்மயி குற்றச்சாட்டுக்கு பலர் ஆதரவும் ஒருசிலர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.

தற்போது திரையுலக நட்சத் திரங்களான சமந்தா, சித்தார்த், வரலட்சுமி சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஸ்ரீரெட்டி உள்ளிட்டோர் சின்மயிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் இதர பெரிய நட்சத்திரங்கள் இவ்விவகாரத்தில் ஒன்றும் சொல்லாமல் மௌனம் காத்து வருகின்றனர். அத்துடன் சின்மயிக்கு பாஜக தலைவர்களான தமிழிசை சௌந்தரராஜனும் ஹெச்.ராஜாவும் தங்கள் டுவிட்டர் பக்கத்தில் ஆதரவு தெரிவித்துள்ளனர். "சின்மயி விவகாரம் கவனத்தில் கொள்ளவேண்டிய, விசாரிக்க வேண்டிய ஒன்று," என்று தமிழிசை குரல் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் "சின்மயி கூறி யுள்ள குற்றச்சாட்டுகள் உண்மையல்ல; அவர் பொய் பேசுகிறார்," என்று சுவிட்சர்லாந்தில் வாழும் புலம்பெயர்ந்த தமிழரும் 'வீழமாட்டோம்' என்ற ஈழ சுனாமி பாடல் நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளருமான சுரேஷ் கூறியுள்ளார்.

இதற்கிடையே "குற்றச்சாட்டு 100% உண்மையே. சின்மயி என்னிடம் இந்த விஷயத்தை சொல்லவே அதிகம் தயங்கினார்," என சின்மயி கணவர் ராகுல் ரவீந்திரன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். சின்மயி தாய் பத்மா‌ஷினி கூறியபோது, "ஒரு சினிமா பாடல் வெளியீட்டு விழாவுக்காக கடந்த 2004ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து நாட்டுக்குச் சென்றோம்.

கச்சேரி முடிந்தபிறகு எல்லோரையும் அனுப்பிவிட்டு என்னையும் என் மகள் சின்மயியையும் மட்டும் தங்கச் சொன்னார்கள். அங்கே வைரமுத்து இருப்பது தெரியாது. "இந்நிலையில் பயண ஏற்பாட் டாளர் என்னிடம் வந்து 'அம்மா நீங்கள் இங்கேயே காத்திருங்கள். சின்மயிக்காக வைரமுத்து ஓட்ட லில் காத்திருக்கிறார், வரச் சொல் லுங்கள்,' என்றார். "ஓட்டலுக்கு எதற்காக சின் மயி தனியாகப் போகவேண்டும்? எந்த தொழில்முறை பேச்சுவார்த் தையாக இருந்தாலும் ஊருக்குச் சென்றதும் வைத்துக் கொள்ள லாமே? எதற்காக இந்த ரகசிய சந்திப்பு? என்று கேட்டேன்.

அதற்கு அந்த நபர் 'வைரமுத்து வுடன் கொஞ்சம் ஒத்துழையுங் கள்,' என்று வெளிப்படையாகக் கூற, 'அதற்கு வேறு ஆளை பாருப்பா,' என கூறிவிட்டு அங்கி ருந்து கிளம்பிவிட்டோம் என்றார். ஏழு தேசிய விருதுகளை பெற்றுள்ள கவிஞர் வைரமுத்து மீதான சின்மயியின் இந்தக் குற்றச்சாட்டு, தமிழ்த் திரையுலகில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.