பீகாரில் 21 குடிசைகள் எரிப்பு

பீகாரில் 21 குடிசைகள் எரிப்பு

1 mins read
47edf0ca-6973-4ecf-87c3-983c36dc739a
80 குடிசைகள் அமைக்கப்பட்டிருந்த குடியிருப்புக்குள் புகுந்து தீ வைத்த பஸ்வான் பிரிவினர். - படம்: இந்திய ஊடகம்

பாட்னா: பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்தில் நிலத்தகராறு தொடர்பாக வீடுகளை காலி செய்யுங்கள் என ரவிதாஸ், மாஞ்ஜி பிரிவுகளைச் சேர்ந்தவர்களை பஸ்வான் பிரிவினர் மிரட்டியுள்ளனர்.

வீடுகளை காலி செய்ய மறுத்ததால் பஸ்வான் பிரிவினர் ரவிதாஸ், மாஞ்ஜி பிரிவுகளைச் சேர்ந்தவர்களின் 80 குடிசைகள் அமைக்கப்பட்டிருந்த குடியிருப்புக்குள் புகுந்து தீ வைத்து எரித்தனர்.

இந்தச் சம்பவத்தில் 21 குடிசைகள் எரிந்து சாம்பலாகின. காயமடைந்தவர்கள் அதே பகுதியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

இச்சம்பவத்துக்கு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், உரிய விசாரணை நடத்த பீகார் முதல்வர் நிதிஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

பஸ்வான் பிரிவைச் சேர்ந்த 10 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். குடிசை எரிப்பால் நவாடா மாவட்டத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்