மோடிக்கு உயரிய அமைதி விருது

மோடிக்கு உயரிய அமைதி விருது

1 mins read
Google News Preferred Icon

சோல்: சோல் அமைதி விருதுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டுள்ளார். உலக நாடுகள் மத்தியில் நட் புணர்வை வளர்க்க மற்றும் அமைதியை நிலைநாட்ட உதவியவர்களை அங்கீகரிக்கும் விதமாக 1990ஆம் ஆண்டில் இருந்து இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. சோல் அமைதி விருது வழங்கும் கூட்டமைப்பின் தலைவர் குவோன் இஹைக், "1.3 பில்லியன் இந்திய மக்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்தை பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளார். மக்களின் பொருளியல் வாழ்க்கையை மேம்படுத்தி தொடர்ந்து முயற்சிகள் எடுத்து வருகிறார்.

"தனது நாட்டின் வளர்ச் சிக்காக அனைத்துலக நாடுகளுடன் தொழில் ரீதியான ஒப்பந்தங்களைச் செய்துள்ளார். "தனது நாட்டின் அமைதிக்காக மட்டும் அல்லாமல் உலக அமைதியை நிலைநாட்ட தொடர்ந்து உழைத்து வருகிறார்," என்றார். இந்த விருதுக்காக உலகம் முழுவதிலுமிருந்து 1,300 பேர் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர்.