புதுடெல்லி: ரஃபேல் ஊழல் குறித்த ஆவணங்களை சேகரித்த தால்தான் சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவை மத்திய அரசு கட்டாய விடுப்பில் அனுப்பியதாக காங்கிரஸ் சாடியுள்ளது. சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ஆகிய இருவரும் விடுப்பில் அனுப்பப்பட்டதற்கு அதிகார மோதல்தான் காரணம் என்று கூறப்பட்டு வந்த நிலையில் காங்கிரசின் இக்குற்றச்சாட்டு பர பரப்பைக் கிளப்பியுள்ளது.
மொயின் குரேஷி என்பவர் மீதான நிதி மோசடி வழக்குகளை நீர்த்துப் போகச் செய்வதற்காக சிறப்பு இயக்குநர் அஸ்தானா ஐந்து கோடி ரூபாய் வாங்கியதாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இதில் ராகேஷ் அஸ்தானாவின் ஆதரவா ளர்கள் சிலரும் சேர்க்கப்பட்டு உள்ளனர். இதற்குப் பதிலடியாக, லஞ்சம் வாங்கியது தான் அல்ல அலோக் வர்மாதான் என்று ராகேஷ் அஸ்தானா அமைச்சரவை செயலா ளர், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்துக்கு புகார் கடிதங் களை அனுப்பியுள்ளார். இதற்கிடையே முன் பிணை கோரியும் வழக்கை ரத்து செய்யக் கோரியும் அஸ்தானா நீதிமன் றத்தை அணுகியதில், அவரது கைதுக்கு 29ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
சிபிஐயின் இரு உயர் அதிகாரி களும் ஒருவர் மீது ஒருவர் லஞ்சப் புகார்களைக் கூறியதால் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியது. இதனால் மத்திய அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. எனவே அஸ்தானா, அலோக் வர் மா இருவரையும் கட்டாய விடுப்பில் அனுப்ப மத்திய அரசு உத்தரவிட் டது. இதையடுத்து இணை இயக்குநர் நாகேஸ்வர் ராவ் தற்காலிக சிபிஐ இயக்குநராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், அலோக் வர்மா நீக்கப்பட்டதற்கு ரஃபேல் ஊழல் குறித்து விசாரிக்க அவர் தீவிரம் காட்டியதுதான் காரணம் என்று கூறப்படுகிறது. ரஃபேல் ஊழல் குறித்த விசார ணைக்காக தனி அணியை உரு வாக்கும் திட்டத்தில் அலோக் வர்மா இருந்ததாகவும் கூறப்படுகி றது. மேலும் பிரதமர் மோடியிடமும் ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்களைக் கேட்டுள்ளார். இந்த ஆவணங்களை இது வரை பிரதமர் மோடி, நிர்மலா சீதா ராமன், அனில் அம்பானி உள்ளிட் டவர்கள் மட்டுமே பார்த்து இருக் கிறார்கள்.
இந்தப் பரபரப்பான சூழ்நிலை யில்தான் இவர் காலவரம்பற்ற கட்டாய விடுப்பில் செல்ல வேண் டும் என்று மோடி உத்தரவு பிறப் பித்து இருக்கிறார். இவரது விடுப்பிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டு இருக்கும் மனுவில்கூட இது முக்கிய விஷய மாக குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் அலோக் இடத்தில் நியமிக்கப்பட்டு இருக் கும் நாகேஸ்வர் ராவ் மோடிக்கும் பாஜகவினருக்கும் மிகவும் நெருக் கமானவர் என்றும் அவர் மீது இரண்டு லஞ்ச புகார்கள் இருக்கி றது என்றும் கூறப்படுகிறது.
இவர் முதல் வேலையாக செய் தது சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவிற்கு எதிரான லஞ்ச வழக்கை விசாரித்த அதிகாரிகளை இடம் மாற்றியதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அதிகாரிகள் பணியிட மாற்றம் குறித்து பேசிய மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, "சிபிஐயின் இரண்டு உயர்மட்ட அதிகாரிகள் குற்றம் சாட்டப்பட்டு உள்ளனர். இந்த விசாரணை நேர்மையாக இருக்க வேண்டும். "எனவே தான் இந்த இடமாற்றம் அவசியமாகிறது. நியாயமான விசாரணைக்கு இது முற்றிலும் அவசியமானது," என்றார்.

