தோல்வி பின்னடைவல்ல: இங்கிலாந்து அணித் தலைவர்

தோல்வி பின்னடைவல்ல: இங்கிலாந்து அணித் தலைவர்

2 mins read

கொழும்பு: இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் அடைந்த ஆக மோசமான தோல்வி இங்கிலாந்திற்குப் பின் னடைவல்ல என்று கூறியுள்ளார் அதன் தலைவர் இயன் மோர்கன். முன்னதாக நடந்த நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியிருந்தது இங்கிலாந்து. எனவே முக்கிய ஆட்டக்கார ர்களுக்கு கடைசி போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. இப்போட்டியில் முதலில் பந்தடித்த இலங்கை அணி நிர் ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 366 ஓட்டங் கள் குவித்தது.

இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை அணியின் அதிகபட்ச ஓட்டம் இதுவாகும். இலங்கை அணியில் முன்னணி பந்தடிப்பா ளர்கள் நால்வர் ஒரே இன்னிங்சில் அரைசதம் கண்டனர். கடந்த 20 ஆண்டுகளில் இதுவே முதல் நிகழ் வாகும். தொடர்ந்து ஆடிய இங் கிலாந்து அணி முதல் 10 பந்துகளில் மூன்று விக்கெட்டு களைத் தாரை வார்த்தது. இந்த வீழ்ச்சியில் இருந்து இங்கிலாந்து அணியால் நிமிரவே முடிய வில்லை. பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலி தவிர வேறு யாரும் சோபிக்கவில்லை. அந்த அணி 26.1 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 132 ஓட்டங்கள் எடுத்திருந்த போது பலத்த மழை பெய்தது. இதைய டுத்து 'டக்வொர்த்-லூவிஸ்' விதிமுறைப்படி இலங்கை அணி 219 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட் டது.

ஒரு நாள் போட்டி வரலாற்றில் இங்கிலாந்து அணியின் மிக மோசமான தோல்வி இதுவாகும். இதற்கு முன்பு 1994ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 165 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்றதே மோசமானதாக இருந் தது. இதுபற்றி பேசிய இங்கிலாந்து அணித் தலைவர் இயன் மோர் கன், "இத்தோல்வி எங்களுக்குப் பின்னடைவு அல்ல. உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு முன் னர் அணியில் மாற்றங்கள் செய் யவும் அனைத்து வீரர்களுக்கும் வாய்ப்பு கொடுப்பதற்குமான முயற்சி இது," என்றார்.