நெல்லை: நெல்லை டவுன் மேல ரதவீதியில் போலிஸ் நிலையம் அருகே நகைக்கடை ஒன்றை உடைத்து ரூ.50 லட்சம் மதிப்பி லான நகைகள் கொள்ளையடிக்கப் பட்ட சம்பவம் அப்பகுதியில் நிகழ்ந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு கடை உரிமையாளர் மணிகண்டன் என் பவர் தமது நகைக்கடை ஊழியர்க ளும் கடையைப் பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டனர். நள்ளிரவு வாக்கில் அங்கு வந்த கொள்ளையர்கள் அதிக சத்தம் கேட்காதபடி முன்பக்க கிரீல் பூட்டையும் கதவையும் உடைத்தனர். உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் 'சோக்கேஸ்' கண்ணாடிகளை உடைத்து அதி லிருந்த தங்க செயின், கழுத்து மாலை, வளையல்கள் உட்பட இரண்டு கிலோ கிராம் எடையுள்ள தங்க நகைகளை மூட்டைக்கட்டி கொள்ளையடித்து சென்று விட்ட னர்.
கொள்ளை போன தங்க நகைகளின் மதிப்பு சுமார் ரூ.50 லட்சம் இருக்கும் என்று கூறப் படுகிறது. மணிகண்டன் நேற்று காலை வழக்கம்போல் கடையைத் திறக்க வந்தார். அப்போது முன் பக்க பூட்டு உடைந்து கிடப்பதைப் பார்த்து பேரதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது தங்க நகைகள் கொள்ளையடிக்கப் பட்டிருப்பது தெரியவந்தது. சின்ன சின்ன மோதிரங்கள், கம்மல்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன.

