ரூ.62 லட்சம் திருடிய இந்தியன் வங்கி காசாளர் கைது

ரூ.62 லட்சம் திருடிய இந்தியன் வங்கி காசாளர் கைது

1 mins read

சென்னை: சென்னை போரூர் இந்தியன் வங்கியில் நாள்தோறும், பத்தாயிரம், பத்தாயிரமாக 62 லட்ச ரூபாய் பணத்தைத் திருடி மோசடியில் ஈடுபட்ட காசாளர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இது குறித்து போரூர் இந்திய வங்கி கிளை மேலாளர் ஜனனி, போரூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதில், வங்கி காசாளர் சுரேஷ் என்பவர், 62 லட்ச ரூபாய் பணத்தைத் திருடியிருப்பதாக தெரிவித்திருந்தார். இது தொடர்பில் வழக்குப்பதிவு செய்து போரூர் காவல்நிலைய ஆய்வாளர் சீதாராமன் விசாரணை மேற்கொண்டார். கடந்த மூன்று ஆண்டுகளாக, காசாளர் சுரேஷ் நாள்தோறும், 10 ஆயிரம் ரூபாய் வீதம் எடுத்து மது குடிப்பது உள்ளிட்ட செலவுகளைச் செய்து உல்லாசமாக இருந்து வந்தது தெரியவந்தது. அவரைக் கைது செய்த காவல்துறையினர், 4 லட்ச ரூபாய் ரொக்கம், 7 சவரன் நகைகளை பறிமுதல் செய்திருக்கின்றனர்.