தொடர் மழையால் தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு விடுமுறை

தொடர் மழையால் தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு விடுமுறை

1 mins read

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் மாவட்டத்தின் பல பகுதிகளில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. மழையின் காரணமாக சென்னையிலிருந்து தூத்துகுடி செல்லவிருந்த இரண்டு விமானங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் மழையின் காரணமாக நேற்று ஒரு நாள்மட்டும் மாவட்டத்தில் உள்ள எல்லா பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

இதேபோல் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம், தக்கலை, திங்கள்நகர், குலசேகரம் போன்ற பகுதிகளிலும் விடிய விடிய மழை பெய்ததால் அப்பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மலையோரப் பகுதிகளில் தொடர் மழை காரணமாக பேச்சிப்பாறை, பெரிஞ்சாணி, சிற்றார் போன்ற அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.